இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை இன்னும் ஒருசில நாட்களில் (79th Independence Day) கொண்டாட உள்ளது.
மூன்று விதமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன
ஆகஸ்ட் 15, 2025 அன்று காலை சரியாக 7.30 மணிக்கு செங்கோட்டையில் பிரதம் நரேந்திர மோடி கொடியேற்ற உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் விரைந்து தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொதுமக்களிடம் மூன்று விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.- வகை 1 : ஒரு நபருக்கு ரூ.20 கட்டணம்.
- வகை 2 : ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம்.
- வகை 3 : ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம்.
சுதந்திர தின விழா டிக்கெட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- அதற்கு முதலில் அரசின் aamantran.mod.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Online Ticket Booking for Independence Day 2025 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கேட்கபட்டுள்ள பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
- அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- எத்தனை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள், எந்த வகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

