சென்னை, ஏப்ரல் 06 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
தமிழகத்தில் மே மாதத்தில் கோடை வெயில் தொடங்கும். இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. மதிய நேரங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே மூடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையும் படிங்க : சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு.. இன்று வெளியாகிறது தண்டனை விவரம்! குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பகல் நேரங்களில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதிக வெப்பம் காரணமாக தமிழக மக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வந்த நிலையில், சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக பூந்தமல்லி, பல்லாவாரம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
தமிழகத்தில் விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆந்திர மாநிலம் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம் - மனு தாக்கல் செய்யும் ஆர்.காந்தி வாட்டி வதைத்து வந்த கடும் வெப்பத்திற்கு மத்தியில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
