Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஷாக்.. ரூ.3,200ஐ தாண்டிய சிலிண்டர் விலை.. ஹோட்டல்கள் என்னாகும்?

ஷாக்.. ரூ.3,200ஐ தாண்டிய சிலிண்டர் விலை.. ஹோட்டல்கள் என்னாகும்?

TV9 Tamil 3 weeks ago
சென்னை, மெ 01 : மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் (Commercial Gas Cylinder Price) ரூ.933 உயர்வை சந்தித்து ஒரு சிலிண்டர் ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வை சந்தித்துள்ள நிலையில், அது உணவகங்களை எவ்வாறு பாதிக்கும், அதன் மூலம்  பொதுமக்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள உள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அதிரடி விலை உயர்வு

மேற்கு ஆசியா போர் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் அதிகரிப்பு, கேஸ் சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
30 ஆண்டுகள் கடனை வெறும் 17 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி? ஹோர்முஸ் நீரிணை விவகாரம் இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான சிக்கல்கள் முழுவதுமாக சீரடையாமல் உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.933 விலை உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உணவகங்களின் நிலை என்ன?

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், உணவகங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் உணவு பட்டியல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களின் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிணடர் விலை உயர்ந்துள்ளது சிறிய உணவங்கங்கள் மூடப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, உணவகங்கள் உணவுகளின் விலையை உயர்த்தும் சூழலும் உருவாகியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil