தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோவாக இருப்பவர் சித்தார்த்(Siddharth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.
ஹாலிவுட் வெப் தொடர் குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவு :
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சித்தார்த் :
நடிகர் சித்தார்த் படங்களை தாண்டி ஹாலிவுட் வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார். இந்த தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாம். இந்த தொடரில் நடிகர் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற பெங்காலி- அமெரிக்கன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகை ப்ரீடா பின்டோவும் நடிக்கவுள்ளாராம். இந்த தொடரானது முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்படும் காதல் குறித்த கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு… ரீ ரிலீஸாகும் அஜித்தின் அட்டகாசம் படம் இந்த வெப் தொடருக்கு அன்அக்கஸ்டம்ட் எர்த் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது ஜும்பா லகிரி என்ற நாவலை தழுவிய கதைக்கத்துடன் உருவாக்கவுள்ளது. இந்த வெப் தொடரின் ஷூட்டிங் லண்டனில் துவங்கியுள்ளதாம். இந்நிலையில், தற்போது நடிகர் சித்தார்த்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. சித்தார்த் ஹாலிவுட் சினிமாவில் களமிறங்கும் நிலைில் அது குறித்த கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
