நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசனுடன் (Kamal Haasan) சிலம்பரசன்இணைந்து நடித்திருந்தார்.
இணையத்தில் வைரலாகும் சிலம்பரசனின் ரீசென்ட் போட்டோஷூட் :
அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் எப்போது :
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணி, இந்த அரசன் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை வீ-க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். இவர் இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு சரி, சிலம்பரசனின் படங்களுக்கும் சரி இசையமைத்ததே இல்லை. இந்த அரசன் திரைப்படத்தின் மூலமாகத்தான் இந்த மூவரின் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இப்படம் தனுஷின் வட சென்னை திரைப்படத்தின் ஒரு பாகமாக உருவாகிவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ஷூடிங் கிட்டத்தட்ட 4 முதல் 5 மாதங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது 2026ம் ஆண்டு தீபாவளி அல்லது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
