தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதலே படங்களில் நடித்துவருபவர் சிலம்பரசன்(Silambarasan). இவர் தனது 3 வயதிலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார்.
தனது வருங்கால மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என சிலம்பரசன் பேச்சு:
அந்த நேர்காணலில் வி.டி.வி.கணேஷ், சிலம்பரசனிடம் "உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் ?" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சிலம்பரசன் ,"எனக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்றால், பொதுவாக வீட்டில் காலையில் என்னை எழுப்பி, காஃபி கொடுத்து, எனக்கு சாப்பாடு செய்வது ஒரு அடக்க ஒடுக்கமான குடும்ப பெண் எனக்கு தேவையில்லை. எனென்றால் அந்த மாதிரி எனக்கு உதவி செய்வதற்குத்தானே வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்! மேலும் தற்போது நான் இருக்கும் நிலைமைக்கு இணையாக இருக்கும் ஒரு பெண்ணும் தேவையில்லை. நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், என்னது நிலைப்பாட்டையும் தாண்டி, எனக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தும் பெண் கிடைத்தால்தான், அந்த பெண்ணிற்கு அடங்கி எனக்கு அந்த மாதிரியான மனைவி தான் வேண்டும்" என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.நடிகர் சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பதிவு:
நடிகர் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறனின் அரசன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்திலும், அதையடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR50 படத்திலும் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

