ஏப்ரல் 6, 2026: சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி என்பது கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும்.
இது பொது தொகுதி ஆகும். இது கோவை மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு முக்கிய நகர்ப்புற தொகுதியாக பார்க்கப்படுகிறது. சிங்காநல்லூர், பீளமேடு, சுங்கம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதே இந்த சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்களாக பார்க்கப்படுவது கோவை சர்வதேச விமான நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், டைடல் பார்க் உள்ளிட்டவை ஆகும்.
அதிமுக VS திமுக:
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், அதிமுக வேட்பாளர் K. R. Jayaram கிட்டத்தட்ட 81,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் 70,390 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மையமும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி என்பது அதிமுக மற்றும் திமுக இடையே இருக்கும் கடுமையான போட்டியை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலிருந்து தற்போது வரை திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அளித்த சிறப்பான பரிசு… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்புகள் என்பது வேட்பாளர்களின் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. சிங்காநல்லூர் தொகுதி கோவையின் முக்கிய வளர்ச்சி மையமாக பார்க்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனைகள்:
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி முழுக்க நகர்ப்புற பகுதியாக இருப்பதால், இங்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பெரும்பாலும் நகர வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. பீளமேடு, ஹோப் காலேஜ், அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
அதேபோல், இந்த பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும், குறிப்பாக கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் பராமரிப்பு குறைவு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு முறையாக இல்லாதது, ஓப்பன் டம்பிங் பிரச்சனை, நகர்ப்புற மக்கள் அதிகரிப்பால் solid waste management சவால்கள் போன்றவை முக்கிய சிக்கல்களாக உள்ளன.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி- தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா வேட்பு மனு தாக்கல்..!
2026 சட்டமன்ற தொகுதி:
ஒரு வளர்ந்து வரும் நகர்ப்புற தொகுதி என்பதால், கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவற்றின் இடையிலான சமநிலையின்மை பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு யார் வழங்குவார்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் என்பதனைப் பொறுத்தே இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் தரப்பில் ஸ்ரீநிதி நாயுடு, அதிமுக தரப்பில் K. R. Jayaram, தமிழக வெற்றி கழகம் தரப்பில் கே.எஸ். கிரி பிரசாத் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் நேருஜி உள்ளிட்டோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

