தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார்.
சிறந்த வில்லனாக தேர்வான அர்ஜுன் தாஸ்:
அதனைத் தொடர்ந்து அரசிற்கும் கைதி படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கைதி திரைப்படம் எனக்கு எப்போதும் ஒரு மிகச் சிறப்பான படமாக இருந்து வருகிறது, இனியும் இருக்கும். 'கைதி' படத்திற்காக சிறந்த வில்லனுக்கான மாநில விருதை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையிலேயே ஒரு பெரிய கௌரவம். என் மீது நம்பிக்கை வைத்த லோகேஷ், கார்த்தி சார் மற்றும் எஸ்.ஆர். பிரபு சார் ஆகியோருக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ரசிகர்களுக்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! எனது பலத்தின் தூண்களான என் பெற்றோருக்கு - இந்த விருது உங்கள் இருவருக்கும் சமர்ப்பணம் என்று தெரிவித்து இருந்தார். ... 29 The Film: விது - ப்ரீத்தி அஸ்ரானியின் '29 தி பிலிம்' படத்தின் ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

