Dailyhunt
சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சித்தாரே ஜமீன் பர் படத்தின் ஓடிடி உரிமையை விற்றார் அமீர் கான்

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சித்தாரே ஜமீன் பர் படத்தின் ஓடிடி உரிமையை விற்றார் அமீர் கான்

TV9 Tamil 1 month ago
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவரது நடிப்பில் பாலிவுட் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நடிகர் அமீர் கான் தேர்வு செய்யும் கதைகள் ரசிகர்கலிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பான கதைகளை தேர்வு செய்வதற்காகவே அமீர் கானுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி அமீர் கானின் நடிப்பில் முன்னதாக வெளியான தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே, டங்கல், லால் சிங் சத்தா ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் அனைத்தும் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் தான் சித்தாரே ஜமீன் பர். நடிகர் அமீர் கான் தயாரித்து நாயகனாக நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி உள்ள நிலையில் படத்தின் கதையை திவி நிதி சர்மா எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் இருந்து ஓடிடிக்கு வரும் சித்தாரே ஜமீன் பர் படம்:

இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பல ஓடிடி நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்குவதற்காக போட்டிப் போட்ட நிலையில் அனைத்து ஓடிடி நிறுவனங்களுக்கும் நோ சொல்லிவிட்டு தனது யூடியூப் சேனலில் படத்தை வெளியிட்டார். அதனை காசு கட்டி பார்க்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது சித்தாரே ஜமீன் பர் படத்தை ஓடிடிக்கு விற்பனை செய்துள்ளார் அமீர் கான். அதன்படி இந்தப் படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ... மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா - ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..

சோனி லிவ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil