தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்னை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் தனுஷ்.
தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்?
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு பிறகு அவர் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை அடுத்ததாக யார் இயக்குவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தை இயக்குவதாக பல இயக்குநர்களின் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து அடிபட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் ரஜினிகாந்திற்கு கதை சொன்னதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ... வசூலில் ரூபாய் 100 கோடியை எட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்… வைரலாகும் அப்டேட்இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

