Tamil Nadu Election 2026 Results : தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது.
இந்நிலையில், 2026ன் வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதுவும் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை விஜய்யின் அரசியல் வருகையால், தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு காணப்படுகிறது. மேலும் எக்சிட் போல் வெளியாகி பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை மே.4 காலை 8.00 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்க உள்ளது. இன்று மாலைக்குள் தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பது முடிவாகிவிடும். தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்

