Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது வேட்பாளர்.. 31 வயதில் எம்எல்ஏ-ஆகும் வழக்கறிஞர்.. யார் இந்த முகமது பர்வீஸ்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது வேட்பாளர்.. 31 வயதில் எம்எல்ஏ-ஆகும் வழக்கறிஞர்.. யார் இந்த முகமது பர்வீஸ்!

TV9 Tamil 2 weeks ago
மிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 233 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனையின் போது மாயமானதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழக வெற்றி கழகம் 233 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதன்படி, இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று திங்கள்கிழமை மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆரம்பம் முதலில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அதன்படி, ஒவ்வொரு தொகுதிகள் வாரியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வந்தனர்.

தவெகவின் இளம் வயது வேட்பாளர்

இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 31 வயதே ஆன இளம் வேட்பாளரான முகமது பர்வீஸ் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை வீழ்த்தி 50 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இளம் வயதில் எம்எல்ஏ பதவி ஏற்கும் வேட்பாளர்

தமிழக வெற்றி கழகத்தில் இளம் வயதில் எம்எல்ஏவாக பதவி ஏற்க இருக்கும் முகமது பர்வீஸ் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் பின்வருமாறு: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது பர்வீஸ் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர், நேஷனல் சட்ட பள்ளியில் இளங்கலை மற்றும் சட்டப் படிப்பை படித்துவிட்டு அச்சகத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், விஜயின் அரசியல் வருகையை தொடர்ந்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சிறு வயது முதல் தவெக தலைவர் விஜயுடன் பழக்கம்

இதற்கு முன்னதாக விஜயின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். அப்போது, விஜய்யுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரிடம் 9.6 கோடி சொத்துகள் இருந்தாலும் மக்களோடு மக்களாக எளிய முறையில் பழகக் கூடியவர். விஜயுடன் சுமார் 12 வயதில் இருந்தே மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தூய்மையான மற்றும் நேர்மையான அரசியலை எனது இலக்கு என்று கூறியது இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முகமது ஃபார்வாஸ் வெற்றி அந்த கட்சியின் இளம் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil