Tamilnadu Weather Today:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஆக.2) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (ஆக.3) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 4 முதல் 7 வரை மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா & குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 4 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கூலிப்படை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!வங்கக்கடல் & அரபிக்கடல்:
ஆகஸ்ட் 5ம் தேதி வரை தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் கேரள-கர்நாடகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
