Dailyhunt
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

TV9 Tamil 5 days ago
மிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களத்தில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தேர்தல் களம் கண்ட முதல் முறையிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி தவெக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மாதவரம் தொகுதியில் உலக சாதனை வெற்றி

இந்தத் தேர்தலின் மிக முக்கியமான மைல்கல்லாக, மாதவரம் சட்டமன்றத் தொகுதியின் முடிவு பார்க்கப்படுகிறது. அங்கு தவெக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபு, தமிழகத்திலேயே மிக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட சுமார் 83,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த இமாலய வெற்றி தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய தொகுதிகளில் தவெகவின் ஆதிக்கம்

மாதவரம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் தவெக வேட்பாளர்கள் தங்களது வெற்றிக் கொடியை நாட்டியுள்ளனர். குறிப்பாக, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி வாகை சூடியுள்ளார். அதேபோல், தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், தாம்பரத்தில் சரத்குமார், தஞ்சையில் விஜய் சரவணன் மற்றும் மதுரை தெற்கு தொகுதியில் எம்.எம். கோபிசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil