சென்னையில் தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 4) வெளியிட்டார்.
திமுக ஆட்சியில் அனைத்திலும் ஊழல்
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவு வந்ததாக கூறும் திமுக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏன் வழங்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றன. தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன இதனால், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வழிகாட்டுவார். பிரதமர் மோடி வழிகாட்டுதலின் பேரில், எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக நடைபெறும். 'திராவிட மாடல்' என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!ஊழல் பணத்தின் மூலம் வெற்றி பெற திமுக திட்டம்
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மது விற்பனை மற்றும் அரசு ஒப்பந்த பணிகள் அனைத்திலும் ஊழல் கமிஷன் நிகழ்ந்துள்ளது. திமுக அரசை தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். ஊழல் பணத்தை வைத்து வெற்றி பெறலாம் என திமுகவினர் எண்ணுகின்றனர். தமிழகத்துக்கான ஜி. எஸ். டி. வரி வருவாய் எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகியோர் ஊழல் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.ரூ.76 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மாநில அரசின் கடன் 2 மடங்காக உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஊழல் அரசியல் செய்து வருகிறது. இந்த ஆண்டு ரூ. 76 ஆயிரம் கோடி தொகை வட்டி செலுத்துவதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். 'விஜய் என் தம்பி.. அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் உண்டு'.. குஷ்பு நெகிழ்ச்சி!!
