Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் மிகவும் சீரியசான கதையை கொண்டு இருப்பதாக படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது 55-வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அந்தப் படங்களின் பணிகள் நிறைவடைந்த பிறகு தனது 56-வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இந்த நிலையில் அடுத்ததாக, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் நடிகர் தனுஷின் இந்த 56-வது படத்தின் படப்பிடிப்பு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ... Jana Nayagan: புகார் கொடுத்த படக்குழு..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil