தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் சினிமா வரை கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி இயக்கவும் செய்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல இயக்கும் படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் முதலாவதாக வெளியாகி உள்ள படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் தொடர்பான முக்கிய அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தனுஷின் 55-வது படத்தின் தற்போதைய நிலை என்ன?
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இப்படத்திற்காக இரண்டு பாடல்களைப் பூர்த்தி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒன்று படத்தின் தொடக்கப் பாடலாக அமையும் என்றும், இப்படத்தில் மம்மூட்டி ஒரு தனித்துவமான தோற்றத்தில் காட்சியளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் ஒரு உளவு சார்ந்த அதிரடித் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது; இக்கட்டத்தின்போது, தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா இடம்பெறும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Sivakarthikeyan: தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கம்..இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

