தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த மாரி செல்வராஜ்:
அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, இப்போது தான் 'கர' பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் … கர கொண்டாடப்படும் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். ... பவிஷ் நாராயணன் நடிப்பில் முடிவடைந்தது லவ் ஓ லவ் படத்தின் ஷூட்டிங்இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

