Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தர்மன் படத்தின் முதல் ஷாட் இதுதான் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

தர்மன் படத்தின் முதல் ஷாட் இதுதான் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கிய இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்மன். ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகின்றார். நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும் அதில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தனர். இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மன் படத்தின் முதல் ஷாட் இதுதான்:

இந்த நிலையில் தர்மன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது 'தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு நான் படமாக்கிய முதல் காட்சியே, அவர் காரிலிருந்து இறங்கித் தனது தனித்துவமான பாணியில் நடந்து வரும் காட்சிதான். அதில் நான் மிகவும் மெய்மறந்துபோய், என்னையே மறந்து விசில் அடிக்கத் தொடங்கிவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அந்த மாதிரி படம் பண்ண முடியலைனு ரொம்ப நாள் வருத்தமாக இருக்கு… அட்லி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil