Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!

தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!

TV9 Tamil 3 weeks ago
மிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி அமைதியான முறையில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4- ஆம் தேதி ( திங்கள் கிழமை) நடைபெற உள்ளது.
இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் கணிப்புகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச அமைச்சரவை பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இதில்,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் - வருமான வரித்துறை..
  • பெரம்பூர் விஜய் - முதல்வர், உள்துறை, மகளிர் நலன், குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர்.
  • கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் - பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அமைச்சர்.
  • வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா- செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
  • டி. நகர் என்.ஆனந்த் - போக்குவரத்து துறை அமைச்சர்.
  • மயிலாப்பூர் வெங்கட் ரமணன் - நிதித்துறை அமைச்சர்.
  • திருச்செங்கோடு அருண்ராஜ் - உணவுத்துறை அமைச்சர்.
  • ஆர். கே. நகர் மரிய வில்சன் - உயர் கல்வித்துறை அமைச்சர்.
  • திருப்பரங்குன்றம் சி.டி.ஆர். நிர்மல் குமார் - பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர்.
  • காரைக்குடி பிரபு - பால்வளத்துறை அமைச்சர்.
  • மயிலம் விஜய் நிரஞ்சன் - தகவல் தொடர்புத்துறை அமைச்சர்.
  • மதுராந்தகம் எழில் கேத்தரின் - சுகாதாரத்துறை அமைச்சர்.
  • மதுரை மத்தி முஸ்தபா - சத்துணவுத் துறை அமைச்சர்.
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்[/caption]

வேளாண் துறை முதல் ஊரக வளர்ச்சி துறை வரை

  • திருப்பூர் தெற்கு - வேளாண்மை துறை அமைச்சர்.
  • சிவகங்கை குழந்தை ராணி நாச்சியார் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்.
  • சேலம் மேற்கு பார்த்திபன் - தொழில்துறை அமைச்சர்.
  • வால்பாறை ஸ்ரீதரன் - வனத்துறை அமைச்சர்.
  • லால்குடி கு.ப. கிருஷ்ணன் - வருவாய்த்துறை அமைச்சர்.
  • ராசிபுரம் லோகேஷ் - அறநிலையத்துறை அமைச்சர்.
  • அவிநாசி கமலி - விளையாட்டு துறை அமைச்சர்.
  • கும்பகோணம் வினோத் - கூட்டுறவுத்துறை அமைச்சர்.
  • சீர்காழி கோபிநாத் - பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்.
  • திருத்தணி சத்ய குமார் - பட்டியல் இனத்தவர் நலன் துறை அமைச்சர்.
  • ஆண்டிப்பட்டி லெஃப்ட் பாண்டி - சட்டத்துறை அமைச்சர்.
  • கம்பம் ஜெகநாத் மிஸ்ரா - சமூக நீதித்துறை அமைச்சர்.
  • சோழவந்தான் கருப்பையா - ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.

நெடுஞ்சாலை துறை முதல் வெளிநாடு வாழ் தமிழர் நலன் வரை

  • திருநெல்வேலி ஆர். எஸ். முருகன் - நெடுஞ்சாலை துறை அமைச்சர்.
  • ஆலங்குளம் விபின் சக்கரவர்த்தி - கனிமவளத்துறை அமைச்சர்.
  • குளச்சல் பிரேம் அலெக்ஸ் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்.
  • கடையநல்லூர் ஜலீல் - வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர். என கட்சியில் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவெக தொண்டர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil