Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!

தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!

TV9 Tamil 3 weeks ago
திமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்களுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தோம். இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் ஆகும். இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடாது என்பதற்காக பகிரங்கமாக வெளிப்படுத்தியது மட்டுமின்றி தவெக தலைமையிடமும் எங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தோம். இதற்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்து வருகின்றனர். அதை நாங்கள் எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

தவெக தலைமையிடம் அதிருப்தி தெரிவித்த சிபிஎம்

அப்போதே நீங்கள் ஏன் கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்கள் இந்த வாய்ப்பு அவர்களுக்கு வேறு ஒரு இடம் உள்ளது என்று ஊக்கம் கொடுப்பது போல தானே உள்ளது என்று அதிருப்தியே தவெக தலைமையிடம் தெரிவித்திருந்தோம். தற்போதும் இதுதான் எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி ஊசல் காரணமாக இரு குழுவாக பிரிந்து செயல்பட தொடங்கினர். இதில், எஸ். பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது.  அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றம்.. புதிய செயலாளர்கள் களமிறக்கல்.. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு!

அடுத்தடுத்து எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள்

பின்னர், அவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்காத காரணத்தால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உடன் சமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அதிமுகவில் செயல்பட தொடங்கினர். இருந்தாலும், அதிருப்தியில் இருந்து வெளிவராத மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகினர். முன்னதாக, தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்

அதன் அடிப்படையில், தற்போது அதிமுகவை சேர்ந்த விராலிமலை தொகுதி எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் திருச்சி வளர்மதி, எஸ். எம். ஆனந்தன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். இது எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து வருவது ஆரோக்கியமான அரசியல் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil