தமிழில் பாட்ஷா, ஷாஜகான், சிட்டிசன், பேரழகன், சிவகாசி, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவன்.
அவர் விலகியதைத் தொடர்ந்து, அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்த பல யூகங்கள் எழுந்தன. இப்போது, அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜகவிலிருந்து விலகிய அவர், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவில் இணைவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சியில் இணைவதற்கு முன்னதாக, அவர் விஜய்யை நேரில் சந்திப்பார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தவெகவைப் பொறுத்தவரை, தமிழகத்தைத் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் தங்கள் கட்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், கேரளாவில் கட்சியின் முகமாக நடிகர் தேவன் போன்ற ஒருவர் இருப்பது மிகவும் சாதகமான அம்சமாக அக்கட்சியினர் கருதுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நடிகர் தேவனுக்கு தவெகவின் மாநிலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த தேவன், அப்பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஆகஸ்ட் 16, 2026 அன்று அறிவித்தார். ஆலப்புழாவில் உள்ள கனிச்சுகுளங்கரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரைத் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தியும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, தேவன் தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக பாஜகவிடம் சமர்ப்பித்தார். நடிகர் தேவன் பல ஆண்டுகளாகப் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நவ கேரளா மக்கள் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தக் கட்சி 2021 ஆம் ஆண்டில் பாஜகவுடன் இணைக்கப்பட்டது. இதனையடுத்து கேரளத்திலும் தவெகவை பலப்படுத்த அக்கட்சியின் திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தை போல கேரளத்திலும் அக்கட்சியினர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தேர்தலில் நின்றால் தவெக குறிப்பிட்ட வெற்றிகளை பெறும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.

