Dailyhunt
தவெகவிற்கு முதல் வெற்றி  -  தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் அபார வெற்றி

தவெகவிற்கு முதல் வெற்றி - தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் அபார வெற்றி

TV9 Tamil 6 days ago
தூத்துக்குடி, மே 4 : தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவது  அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தவெகவிற்கு முதல் வெற்றியாக தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்தார். 10 சுற்றுகள் முடிவில் 15,971 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil