Dailyhunt
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அட்டவணை.. களமிறங்கும் கோலி, ரோஹித்!

Team India: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அட்டவணை.. களமிறங்கும் கோலி, ரோஹித்!

TV9 Tamil 1 month ago
ந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.இருப்பினும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு, பிசிசிஐ ஒரு புதிய தொடர் அட்டவணையை வெளியிட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணி(Indian Cricket Team) மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். ஐபிஎல்-க்குப் பிறகு, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், அதன் பின்னர் அயர்லாந்து, மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் தொடர்ந்து விளையாட இருக்கிறது. ஐபிஎல் 2026ஐ கண்காணிக்கும் தேர்வுக்குழு.. 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி!

இந்தியா - அயர்லாந்து டி20ஐ தொடர் அட்டவணை:

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்திற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், இந்திய அணி 2018, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதி தொடங்குகிறது, இரண்டாவது டி20ஐ போட்டி 2026 ஜூன் 28ம் தேதி நடைபெறும். இரண்டு போட்டிகளும் பெல்ஃபாஸ்டில் நடைபெறும்.
  • முதல் டி20 போட்டி - இந்தியா - அயர்லாந்து - பெல்ஃபாஸ்ட்
  • இரண்டாவது டி20 போட்டி - இந்தியா - அயர்லாந்து - பெல்ஃபாஸ்ட்

ரோஹித்தும் விராட்டும் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள்?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார்கள். இருப்பினும், அதற்கு முன்னதாக, இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் மற்றும் விராட் விளையாடுவார்கள். இந்தியா - ஆப்கானிஸ்தான் தொடர் 2026 ஜூன் 6 முதல் 2026 ஜூன் 20 வரை நடைபெறும். 2027 ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எத்தனை அணிகள் பங்கேற்கும்? அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்படும். இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும். இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2026 ஜூலை 1 முதல் ஜூலை 19 வரை நடைபெறும். இதன் காரணமாக, ஐபிஎல் 2026 முடிவடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி மிகவும் பரபரப்பான அட்டவணையை கொண்டுள்ளது. வரவிருக்கும் 3 தொடர்களில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil