வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Sooryavanshi) இன்று அதாவது 2026 ஜூலை 4 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.
சிக்ஸர் அடித்த இளம் வீரர்
வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் தனது முதல் 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் தனது இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.அறிமுகமான இளம் இந்தியர்:
சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிக இளம் வயது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் தனது முதல் போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பு, இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். வைபவ் சூர்யவன்ஷி கடந்த 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அறிமுகமாகும் 15 வயதான சூர்யவன்ஷி - சச்சினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி
முதல் போட்டியில் அரைசத பார்ட்னர்ஷிப்:
வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே அரைசதக் கூட்டணி அமைத்து சாதனை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வைபவ் சூர்யவன்ஷியும் அபிஷேக் சர்மாவும் 29 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர்.
