இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தின் மூலமாகதான் இந்தி சினிமாவில் தனுஷ்
நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி வைத்துள்ள படம் தான் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படமும் காதல் தோல்வி குறித்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். படம் நேற்று நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் உடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரியன்ஷு பைன்யுலி, டோட்டா ராய் சவுத்ரி, பரம்வீர் சிங் சீமா, சித்தரஞ்சன் திரிபாதி, ஜெய பட்டாச்சார்யா, வினீத் குமார் சிங், முகமது ஜீஷான் அய்யூப், சுஷில் தஹியா, மாஹிர் மொகிதீன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தேரே இஸ்க் மெய்ன் படத்தின் வசூல் எவ்வளவு?
இந்த தேரே இஸ்க் மெய்ன் படம் ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. காதல் தோல்வியை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி உள்ளதாகவும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் காதல் தோல்வியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதுகுறித்து ரசிகர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் வெளியான நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் இந்தி மொழியில் மட்டும் ரூபாய் 15.06 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ... அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோதேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: