Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!

தேர்தலில் படுதோல்வி.. இளம் தலைமுறையினரை ஈர்க்க திமுகவின் புதிய முயற்சி!!

TV9 Tamil 1 week ago
டந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், புதிதாகத் தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற அபார வெற்றி, தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய், பிற கட்சிகளின் ஆதரவோடு தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த இமாலய வெற்றிக்கு 'ஜென்சி' (GenZ) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறை வாக்காளர்களே மிக முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

திமுகவின் 'GenZ DMK' முயற்சி:

திராவிடக் கட்சிகள் தங்களை விட்டு விலகிச் செல்வதாக இளைஞர்கள் மத்தியில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, இளம் தலைமுறையினரை மீண்டும் திமுகவை நோக்கி ஈர்க்கும் பொருட்டு 'GenZ DMK Meetup' என்ற புதிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் கொளத்தூர் தொகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் குறித்தும், பிற இளைஞர்களிடம் திமுகவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் ஆலோசனைகளும் விவாதங்களும் நடத்தப்பட்டன . இந்தத் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்:

நடந்த இந்த GenZ சந்திப்பு குறித்து திமுக தலைவர் தனது ட்விட்டர் பதிவில், எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்! என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதோடு, அந்த சந்திப்பில் பங்கேற்ற இளம்தலைமுறையினர் கையெழுத்திட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

"எதிரி எடுத்த அதே ஆயுதம்"

"அரசியலில் எதிரி ஒரு ஆயுதத்தை எடுத்து அதில் பலன் கண்டுவிட்டால், அதை எதிர்கொள்ள நாமும் அதே ஆயுதத்தைக் கையில் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், விஜய் வசமுள்ள ஜென்சி வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக எடுக்கும் இந்த முடிவு ஒரு யதார்த்தமான சரியான பாதை" என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிகாரப்படுத்துதல் மற்றும் பதவிகள்:

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணிசமான விழுக்காடு சீட்டுகளை ஒதுக்க வேண்டும். கட்சிப் பதவிகளிலும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். விஜய்யின் கட்சியில் பெரும்பாலும் புதியவர்களுக்கே வாய்ப்பு தரப்படுவதால், திமுகவிலும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது திமுகவின் கடமை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil