தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தனது முன்மாதிரிகள் யார் என்பது குறித்து தளபதி விஜய் பகிர்ந்த விஷயம்:
சமீபத்தில் தளபதி விஜய் கலந்துகொண்ட நேர்காணலில் அவரிடம் தொகுப்பாளர், "உங்களை ஊக்குவிக்கும் தலைவர்கள் அல்லது ஆளுமைகள் யாராவது இருக்கிறார்களா?" என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், " எனக்கு ஷாருக்கானின் உச்சரிப்பு மற்றும் அவர் எவ்வளவு தெளிவாக பேசுகிறார் என்பதை நான் பாராட்டுகிறேன். நான் எப்போதும் அவரிடம் இருந்து அதை கவனித்திருக்கிறேன். கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு விஷாலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு - என்ன காரணம் தெரியுமா? மேலும் எம்.ஜி.ஆர், ஜெலயலிதா மற்றும் கலைஞர் ஆகியோரை எனது முன்மாதிரிகளாகவும், அர்த்தமுள்ள ஒன்றை சாதித்த தலைவர்களாகவும் அவர்களை நான் பார்க்கிறேன்" என அந்த பத்திரிகை நேர்காணலில் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.தளபதி விஜய் பேசியது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு :
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படமானது வெளியாகியிருந்தால் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டிருக்கும். அந்த விதத்தில் இன்னும் இப்படத்தின் சென்சார் பிரச்சனை முடியதாக காரணத்தினால் எப்போது வெளியாகும் என படக்குழு உறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

