தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை இருந்து வருபவர்கள் அட்டகத்தி தினேஷ் (Dinesh) மற்றும் கலையரசன் (Kalaiyarasan).
தண்டகாரண்யம் படக்குழு வெளியிட்ட டீசர் பதிவு :
இந்த தண்டகாரண்யம் திரைப்படத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா பன்னீர்செல்வம், ஷபீர் கல்லாரக்கல், வின்சு சாம், பால சரவணன். அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருகின்றனர். இந்த தண்டகாரண்யம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் உருவாகியிருக்கிறது. : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. - தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
தண்டகாரண்யம் படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த தண்டகாரண்யம் திரைப்படமானது கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, பின் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் முழுமையாக ஷூட்டிங் நிறைவடைந்திருந்தது. இந்த படமானது கிராமத்து கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. அதிரடி அக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ தர சான்றிதழை வழங்கியிருக்கிறது. இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமானது வரும் 2025, செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
