Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக தொடர் பின்னடைவு.. மனமுடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுத தொண்டர்!

திமுக தொடர் பின்னடைவு.. மனமுடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுத தொண்டர்!

TV9 Tamil 3 weeks ago
மிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே திமுகவுக்கு பாதகமான முடிவுகள் வரத் தொடங்கின. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் நூறு தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தது. அதிமுக 75 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று இருந்தது., இதனால், அதிமுக மற்றும் தவெக இடையே போட்டி நிலவியது. திமுக கூட்டணி கட்சிகள் 57 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதிமுக கூட்டணி 67 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 61 தொகுதிகளில் 3- ஆம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்ற ஆர்வத்தில் அந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு இருந்தனர்.

ஆனால், ஒவ்வொரு சுற்று முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான பின்னடைவை சந்தித்து வந்தது. இதில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், முதல் வருமான மு. க. ஸ்டாலின் 6.500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். இதே போல, திமுகவை சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்த திமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் அதிக அளவிலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது தொடர்பாக திமுக தொண்டர்கள் கூறுகையில், மக்களுக்காக திமுக அரசு அதிக அளவிலான திட்டங்களை செயல்படுத்தியும் இப்படி ஒரு தோல்வியே சந்தித்துள்ளோம். தலைவர் மு க ஸ்டாலின் மக்களுக்காக கடுமையாக உழைத்தார். மகளிர்காக திமுக அரசு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது. அண்ணா அறிவாலயத்தில் கொட்டகை பிரிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil