Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தினமும் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும்..?

தினமும் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும்..?

TV9 Tamil 2 weeks ago

ருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்ல சக்தி தரும்.

நாள் முழுவதும் சோர்வில்லாமல் செயல்பட உதவுகிறது. உடல் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அதிகரிக்கிறது.

காலையில் சாப்பிடும் போது இது எளிதில் செரிமானமாகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உடல் எடை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

கருப்பு கொண்டைக்கடலையில் கார்போஹைட்ரேட்கள், புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கும் தேவையானவை. இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கும் நல்லது.

இந்த கொண்டைக்கடலை உடலின் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த சர்க்கரை திடீர் உயர்வைத் தடுக்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். உடலின் சக்தி நிலையை சீராக வைத்திருக்கிறது.

இரவு ஊறவைத்து காலையில் சாப்பிடும் போது நீண்ட நேரம் நிறைவுணர்வு தருகிறது. தேவையற்ற இடைவேளை உணவு ஆசையை குறைக்கிறது. செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil