ஆலப்புழா, நவம்பர் 22 : கேரள (Kerala) மாநிலம் ஆலப்புழா (Alappuzha) மாவட்டம் தும்பேலி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்.
திருமணத்திற்கு முன்பாக விபத்தில் சிக்கிய மணமகள்
திருமணத்திற்கு முன்னதாக மணமகள் ஆவணி ஒப்பனை செய்தற்காக தனது அத்தையுடன் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். காரை மணமகளின் அத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் மரத்தின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மணமகள் ஆவணி மற்றும் அவரது அத்தை இருவரும் காயமடைந்தனர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதித்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக மணமகள் விபத்தில் சிக்கியது இரு வீட்டாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்
மணமகளுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணமகன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைண்துள்ளார். அப்போது மருத்துவமனையிலே வைத்து அவர் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மண்டபத்தில் திருமணத்திற்காக வந்த உறவினர்களை இரு வீட்டாரும் உணவு வழங்கி கவனித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு மணமக்கள் இல்லாமலே திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 8 பிள்ளைகள்.. குடும்ப வறுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை.. சோக சம்பவம்! திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கி மணமகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையிலே வைத்து மணமகன் அந்த பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
