Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம்.. நாளை வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டம்!!

தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம்.. நாளை வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா செல்ல திட்டம்!!

TV9 Tamil 2 weeks ago
மிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஓய்வெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ச்சியாக ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை (மே 2) அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக விஜய், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த நாகை மாவட்டப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.  உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

ஆன்மீகப் பயணத்தின் பின்னணி:

கடந்த சில தினங்களாகவே விஜய் பல்வேறு முக்கிய ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வருகிறார். அவ்வாறு, சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்ற அவர், அதிகாலையில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அதேபோல மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். இந்த நிலையில், மதங்களைக் கடந்த தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அவர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

நாளை வேளாங்கண்ணி பயணம்:

அந்தவகையில், நாளை அதிகாலை 5 மணியளவில், நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று இரவே வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணி வழிபாட்டைத் தொடர்ந்து, அவர் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகத் திகழும் நாகூர் ஷாஹுல் ஹமீது தர்காவிற்கும் சென்று போர்வை போர்த்தி மரியாதை செலுத்தவுள்ளார். அங்கும் அவர் சிறப்பு வழிபாடுகளை நடத்துவார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

அரசியல் முக்கியத்துவம்

தேர்தலுக்குப் பிறகான ஓய்வு நேரத்தை ஆன்மீகப் பயணங்களாக மாற்றியுள்ள விஜய், மும்மதங்களையும் சமமாகப் போற்றும் வகையில் தனது பயணத் திட்டங்களை அமைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது நாகை மாவட்டத்திற்கு அவர் வருகை தரும் செய்தி, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் - வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை.. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் விஜய், தேர்தல் முடிவுக்கு முன்பு தொடர் பிரார்தனைகளில் ஈடுபட்டு வருகிறார். "மதச்சார்பற்ற" மற்றும் "அனைவரையும் உள்ளடக்கிய" ஒரு அரசியல் பாதையைத் தான் தேர்ந்தெடுத்திருப்பதைச் செயலில் காட்டவே அவர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil