தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபல நடிகராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் தளபதி விஜய் (Thalapathy Vijay).
தளபதி விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா:
தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய், அண்மையில் தனது 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதில் விஜய்க்கு அசையும் சொத்துக்கள் ரூ404.58 கோடிகள் இருப்பதாகவும், அசையா சொத்து ரூ 198.62 கோடிகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். விஜய் பிரமாண பத்திரத்த்தில் கணிசமான பகுதி, ரூ 213 கோடிக்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகைகள் போன்ற எளிதில் பணமாக்கக்கூடிய சொத்துக்களில் உள்ளது. பிரீமியம் சொத்துக்கள், கொடைக்கானலில் விவசாய நிலம், மற்றும் பிற வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார். முன்னிலையில் விஜய்யின் தவெக.. இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு! மேலும் விலையுயர்ந்த கார்களான BMW மாடல்கள், லெக்ஸஸ், மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்ற உயர் ரக சொகுசு கார்களையும் சொந்தமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உட்பட, சுமார் ரூ. 15.76 கோடி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.விஜய்யின் கட்சி முன்னிலையில் குடும்பதுடன் கொண்டாடிய எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரின் குடும்பத்தினர்:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் அவரின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் கொண்டதை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

