புதியதாக ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்கியவுடன் பலரும் அதில் என்ன என்ன அம்சங்கள் உள்ளது, ஸ்மார்ட்போன் எப்படி செயல்படுகிறது என்பதில் தான் அதிக ஆர்வம் செலுத்துவர்.
டிவைஸ் டிராக்கிங்
உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் தான் இந்த டிவைஸ் டிராக்கிங் (Device Tracking). உங்களது ஸ்மார்ட்போன் திருடு அல்லது தொலைந்துவிட்டது என்றால் அதனை கண்டுபிடிக்க இந்த அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.- அதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் Settings-க்குள் செல்லுங்கள்.
- அதில் உள்ள Security என்ற அம்சத்தை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு அதில் உள்ள Find My Device என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு - ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் - மத்திய அரசு அறிவிப்பு
ரிமோட் லாக் மற்றும் ஆஃப்லைன் டிராக்கிங்
ரிமோட் லாக் மற்றும் ஆஃப்லைன் டிராக்கிங் (Remote Lock and Offline Tracking) அம்சம் உங்களது ஸ்மார்ட்போன் திருடுபோனால் அதனை கண்டுபிடிக்க உதவும் மிக முக்கிய அம்சமாகும்.- ரிமோட் லாக் : திருடுபோன உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அதனை வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் லாக் செய்யலாம்.
- ஆஃப்லைன் டிராக்கிங் : உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது அதில் நெட்வொர்க் இல்லை என்றாலும் கூட டிராக் செய்ய முடியும்.

