Dailyhunt
உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க

உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க

TV9 Tamil 0 months ago

ன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ்அப் செயலி நம் தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் முதல் வேலை தொடர்பான முக்கிய ஆவணங்கள் வரை பல தகவல்களை அனுப்ப, தகவலை பரிமாற வாட்ஸ்அப் முக்கியமான கருவியாக மாறியிருக்கிறது.

இதனால், மொபைலை மாற்றும்போது அல்லது டேட்டா இழப்பை தவிர்க்க, வாட்ஸ்அப் உரையாடல்களை பாதுகாப்பாக பேக்கப் செய்வது அவசியமாகிறது.

உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா?

இதற்காக ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள், தங்களது வாட்ஸ்அப் உரையாடல்களை கூகுள் அக்கவுண்ட் மூலம் எளிதாக டேட்டாவை சேமிக்கலாம். இதனால் நாம் மொபைல் மார்றினால் கூட நமது உரையாடல்கள், ஆடியோ, வீடியோ ஃபைல்கள் ஆகியவற்றை இழக்காமல் தவிர்கக முடியும்.

இதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலியில் Settings பகுதியில் சென்று Chats என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பிறகு அதில் Chats Backup என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Google Account என்பதை இணைக்க வேண்டும். அதன் பின் கூகுள் கணக்கில் உங்கள் சாட்ஸ் அனைத்து சேமிக்கப்பட Backup என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் Include Videos என்ற ஆப்சனை தேர்வு செய்தால், வாட்ஸ்அப்பில் உள்ள வீடியோக்கள் மர்றும் புகைப்படங்களும் சேர்த்து சேமிக்கப்படும்.

கூடுதலாக Daily Automatic Backup என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு நாளும் உங்கள் தகவல்கள் தானாகவே சேமிக்கப்படும். இதன் மூலம் முக்கியமான தகவல்களை இழப்பதை தவிர்க்க முடியும்.  அதே போல நீங்கள் பயன்படுத்தும் கூகுள் அக்கவுண்டை மாற்ற வேண்டுமானால் Chat Backup என்ற பகுதியில் Google Account என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து புதிய அக்கவுண்டை மாற்றிக்கொள்ளலாலம்.

மேலும் உங்கள் வாட்ஸ்அப் தகவல்களை சேமிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை கவனிக்க வேண்டும். இதற்கு நல்ல இண்டர்நெட் கனெக்ஷன் தேவைப்படும். அதிக நெட் டேட்டா தேவைப்படும் என்பதால் வைஃபை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் உங்கள் கூகுள் அக்கவுண்டில் போதுமான ஸ்டோரேஜ் இருக்க வேண்டும். அதே போல ஒரு முறை பேக்கப் என்பதை தொடங்கிய பிறகு அதனை நிறுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த எளிய முறைகளை பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்களை பாதுகாப்பாக கூகுள் டிரைவில் சேமிக்க  முடியும். இதன் மூலம் நம் ஸ்மார்ட் போனை இழக்கும் போது நம் வாட்ஸ்அப் டேட்டாக்களை இழக்காமல் பாதுகாக்க முடியும். இது சிறியதாக தோன்றினாலும் முக்கியமான நேரத்தில் பெரிதும் கைகொடுக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil