Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாழ்க்கையில் சந்தோஷம் குறைகிறதா? மீண்டும் குழந்தை மனம் வேண்டுமா?

வாழ்க்கையில் சந்தோஷம் குறைகிறதா? மீண்டும் குழந்தை மனம் வேண்டுமா?

TV9 Tamil 6 days ago
ன்றாட வாழ்க்கையில் வேலை, குடும்பப் பொறுப்புகள், தொழில்நுட்பப் பயன்பாடு என பல்வேறு விஷயங்கள் நம்மை தொடர்ந்து தீவிரமான மனநிலையில் வைத்திருக்கின்றன.
இதனால் குழந்தைப் பருவத்தில் இருந்த சிரிப்பு, ஆர்வம், ஆச்சரியம், புதுமையான விஷயங்களை முயற்சிக்கும் மனநிலை போன்றவை பெரியவர்களாகும்போது குறைந்து விடுகின்றன. ஆனால் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் குழந்தைகளுக்கு மட்டுமே தேவையானவை அல்ல; பெரியவர்களின் மனநலத்துக்கும் அவை பயனுள்ளதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்கு பிடித்த விளையாட்டுத்தனத்தை கண்டுபிடியுங்கள்

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு ஓவியம், இசை, நடனம் போன்ற படைப்பாற்றல் செயல்கள் பிடிக்கும்; சிலருக்கு விளையாட்டு, போட்டி அல்லது புதுமையான அனுபவங்கள் உற்சாகத்தைத் தரலாம். எனவே, சிறுவயதில் எந்தச் செயல்களைச் செய்யும்போது நேரம் போவதே தெரியாமல் இருந்தது என்பதை நினைத்துப் பார்ப்பது உதவியாக இருக்கும். அந்த பழைய ஆர்வங்களை மீண்டும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முயற்சிப்பது, மனதில் மறைந்திருக்கும் மகிழ்ச்சியை மீண்டும் தூண்டக்கூடும்.

சுற்றுப்புறத்திலும் சிறிய மாற்றங்களை செய்யுங்கள்

வீடு அல்லது பணியிடச் சூழலும் நமது மனநிலையை மாற்றக்கூடியது. பிடித்த இடங்களின் புகைப்படங்கள், மகிழ்ச்சியான நினைவுகளைத் தூண்டும் பொருட்கள், வண்ணமயமான அலங்காரங்கள் போன்றவற்றைச் சுற்றிலும் வைத்திருப்பது உற்சாகமான மனநிலையை உருவாக்க உதவும். தொலைபேசியில் பேசும்போது காகிதத்தில் கிறுக்குவது, ஆவணங்களை வண்ணக் கோப்புகளில் ஒழுங்குபடுத்துவது போன்ற சாதாரண செயல்களைக்கூட சற்று விளையாட்டுத்தனமாக மாற்றலாம்.

குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

குழந்தைகள் ஒரு சாதாரண விஷயத்தைக்கூட ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள். அந்த மனநிலையை பெரியவர்களும் தங்களது வாழ்க்கையில் ஓரளவு பின்பற்றலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் நகைச்சுவையாகப் பேசுவது, வித்தியாசமான முறையில் வாழ்த்து சொல்வது அல்லது சிறிய நகைச்சுவையான பழக்கங்களை உருவாக்குவது போன்றவை அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும். அதற்காக பெரிய அளவில் நேரமோ பணமோ செலவிட வேண்டிய அவசியமில்லை. : டேட்டிங் செய்யும்போது உஷார்! உறவை உடைக்கும் 'ட்ராமா டம்பிங்'

தினசரி வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சிகளை சேருங்கள்

விளையாட்டுத்தனத்துக்காக தனியாக பல மணி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சில விநாடிகள் பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பாடலை சத்தமாகப் பாடுவது, நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் தனிப்பட்ட கைகுலுக்கல் முறையை உருவாக்குவது போன்ற சிறிய செயல்களும் அன்றாட வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக சலிப்பாக இருக்கும் நேரங்களில் செல்போனை எடுத்து சமூக வலைதளங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக இதுபோன்ற சிறிய வேடிக்கையான செயல்களை முயற்சிப்பது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil