இந்தியாவின் பல வரலாற்றுச் சின்னங்கள் இன்று பாரம்பரிய ஹோட்டல்களாக புதிய வடிவம் பெற்றுள்ளன. பழமையான அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் காலனித்துவக் கட்டிடங்களில் தங்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
பாரம்பரிய முற்றங்களின் நவீன வடிவமைப்பு
இந்தியக் கட்டடக்கலை மரபில் 'வீட்டின் முற்றம்' (Courtyard) என்பது வெறும் வெளிச்சம் தரும் இடம் மட்டுமல்ல, அது குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் உயிர் நாடியாகும். தற்கால நவீன வீடுகளில் இந்த முற்றங்களை இயற்கை எழிலோடு வடிவமைக்கத் தாவரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. சரியான தாவரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வீட்டின் அழகை அதிகரிப்பதோடு, இயற்கையான காற்றோட்டத்தையும் குளிர்ச்சியான சூழலையும் உருவாக்க முடியும்.ஆன்மீகமும் நறுமணமும் இணைந்த தாவரங்கள்
இந்திய முற்றங்களுக்கு மிகவும் ஏற்றவை நமது பாரம்பரிய நறுமணச் செடிகளே ஆகும். துளசி மற்றும் மூலிகைகள்: முற்றத்தின் மையப் பகுதியில் துளசி மாடம் வைப்பது பாரம்பரிய முறையோடு, நச்சுக்களற்ற தூய காற்றையும் வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செண்பகம் மற்றும் மல்லிகை: மாலையில் வீடெல்லாம் நறுமணம் பரப்பக்கூடிய இந்த மலர்ச் செடிகள், மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியான சூழலை உருவாக்குகின்றன. செம்பருத்தி: பளிச்சென்ற வண்ண மலர்களால் முற்றத்திற்குத் தனித்துவமான அழகைத் தருகிறது.குறைந்த பராமரிப்பில் சுலபமாக வளரும் செடிகள்
அதிகக் கவனம் செலுத்த முடியாவிட்டாலும் செழித்து வளரக்கூடிய தாவரங்கள் முற்றத்திற்கு அழக சேர்க்கின்றன. காகிதப் பூ (Bougainvillea): முற்றத்தின் சுவர்கள் மற்றும் வளைவுகளில் படர்ந்து வளரும் இந்தச் செடி, ஆண்டின் பெரும்பகுதி பூக்களைப் பூத்து வீட்டை வண்ணமயமாக மாற்றுகிறது. அரேகா பாம் மற்றும் மான்ஸ்டெரா (Areca Palm & Monstera): அகலமான பசுமை இலைகளைக் கொண்ட இந்தத் தாவரங்கள் முற்றத்திற்கு ஒரு வெப்பமண்டல (Tropical) இயற்கை எழிலைத் தருகின்றன. பாம்புச் செடி (Snake Plant) & மணி பிளாண்ட்: குறைந்த வெளிச்சத்திலும் வளரக்கூடிய இவை, காற்றைச் சுத்திகரிப்பதில் மிகச் சிறந்தவை. : நாட்டில் தங்கி ரசிக்கக்கூடிய 8 வரலாற்றுச் சின்னங்கள் எது எது தெரியுமா?சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
முற்றங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீட்டிற்குள் நேரடியாக வரும் சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் கோடைக் காலங்களில் வீட்டின் வெப்பநிலை இயற்கையாகவே குறைகிறது. மேலும், இவை நவீன நகர வாழ்க்கையில் இயற்கையோடு இணைந்த ஒரு பசுமை அமைதியை நமக்குக் கட்டணமின்றி வழங்குகின்றன. பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
