இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததன் மூலம், ஊழியர்களுக்கான முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வேலையில் இருந்து விலகும் ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டியவை
முன்னதாக, ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்த பிறகு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, சம்பளம் மற்றும் பிற தொகைகளைப் பெற பல வாரங்கள் அல்லது சில சமயங்களில் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.இதனால் நிதி சிக்கல்களால் ஊழியர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த புதிய விதி அந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதியாக வழங்கப்படும் முழு தொகை என்பது ஒரு ஊழியர் தனது பணியில் இருந்து விலகும்போது அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து தொகையையும் கணக்கிட்டு வழங்கும் செயல்முறை ஆகும். இதில் வேலையை விட்டு விலகுபவர்கள் அல்லது பணி நீக்கம் செய்யப்படுபவர்தள் அல்லது பணிியில் இருக்கும் போது திடீர் மரணம் போன்ற அனைத்து நிலைகளும் அடங்கும்.
இறுதியாக வழங்கப்படும் முழு தொகையை கணக்கீடும் முறையில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணமாக நிறுவனத்தில் கடைசியாக வழங்கப்படும் சம்பளம் அந்த நிறுவனத்தில் கடைசி மாதத்தில் அந்த ஊழியர் வேலை பார்த்த நாட்களை கணக்கிட்டு வழங்கப்படும். மேலும் அதற்கான ஹெச்ஆர்ஏ போன்ற அலவன்ஸ்களும் அடங்கும். மேலும் அந்த அந்த வருடத்தில் எடுக்காத விடுமுறைகளுக்கும் சேர்த்து பணமாக வழங்கப்படும்.
போனஸ், ஊக்கத்தொகை, பண நிறைவுக்காக வழங்கப்படும் பணம் ஆகியவைம் இறுதி சம்பளத்தில் வழங்கப்படும். அதே நேரம் வரி, கடன், முன்பணம, லேப்டாப் போன்ற நிறுவனத்தின் பொருட்களை திருப்பி வழங்காதது போன்ற காரணங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படால். மொத்தத்தில் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் போது தங்களுக்கான பணத்தை விரைவாக பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. இது ஊழியர்களுக்கான சுதந்திரத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

