சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் நாட்டு மக்களிடையே அறிமுகம் ஆனவர் நடிகர் சந்தானம் (Actor Santhanam).
வெளியானது சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். ஹாரர் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் லவ் பைட். இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ... ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!லவ் பைட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

