தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா?
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் 'வீர தீர சூரன்' திரைப்படத்தைத் தயாரித்த ரியா ஷிபு, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான சர்வமும் மாயாவில் இவர் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சியான் 63 திரைப்படத்திலும் இவர் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் நடுப்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது. ... Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் - வைரலாகும் பதிவு!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

