கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களை ஒரு வீடியோ ஆக்கிரமித்துள்ளது. அதாவது ரஷ்ய ஜோடி ஒன்று அமெரிக்காவின் (America) , நியூயார்க் (Newyork) மாகாணத்தில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் (Empire State Building) மேலே ப்ரொபோஸ் செய்த வீடியோ தான்.
நீயூயார்க் சம்பவத்தை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி
ரஷ்யாவை சேர்ந்த ஜோடி ஒன்று, அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களை கண்காணிக்க உடனடியாக காவல்துறையினர் எலிகாப்டரை அனுப்பி சோதனை செய்தபோது, அவர்கள் காதல் ப்ரொபோஸ் செய்தது தெரிய வந்தது. இருப்பினும் அவர்கள் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுகிக்கப்பட்டனர். Viral Video : ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!இணையத்தில் வைரலாகும் பீகார் தம்பதியின் வீடியோ
எம்பயர் ஸ்டேட் கட்டட காதல் ப்ரொபோசல் சம்பவத்தை ரீகிரியேட் செய்ய முடிவு செய்த பீகார் தம்பதி, செல்போன் டவரின் மீது ஏறியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் அவர்கள் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்னதாகவே அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். Viral Video : சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலையில் விழுந்த மரக்கிளை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

