Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Viral Video : நாயை ஆற்றில் வீசிய பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Viral Video : நாயை ஆற்றில் வீசிய பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

TV9 Tamil 3 days ago
லகில் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும்.
இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், நேபாளில் பெண் ஒருவர் நாயை ஆற்றில் தள்ளிவிடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆற்றில் நாயை தள்ளிவிட்ட பெண் -  ஷாக் சம்பவம்

நாய், பூனை ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது மனிதர்கள் மத்தியில் ஒரு பழக்கமாக உள்ளது. அவ்வாறு செல்லப்பிராணிகளை வளர்க்கும் மனிதர்கள், நாளடைவில் அந்த செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது அவற்றை பராமரிக்க முடியவில்லை என்றாலோ தங்களது செல்லப்பிராணிகளை கண்காணாத இடத்தில் விட்டுவிடுவது, கொலை செய்வது உள்ளிட்ட கொடூரமான செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் தான் பெண் ஒருவர் தான் வளர்த்த நாயை பாலத்தின் மீது இருந்து ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. Viral Video : ஒரு கடைசி முத்தம்.. பணி ஓய்வின் போது பேருந்து ஓட்டுநர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர், தன்னுடன் இருக்கும் நாயை ஆற்றில் தள்ளிவிட முயற்சி செய்கிறார். ஆனால், அந்த நாயோ கீழே குதிக்காமல் தயங்குகிறது. இந்த நிலையில், அந்த பெண் நாயை தூக்கி ஆற்றில் வீசுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. Watch Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை.. இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ வீடியோவை ஆதாரமாக வைத்து இந்த கொடூர செயலை செய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil