Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விறுவிறுப்பாக நடைபெறும் 3 இடியட்ஸ் படத்தின் பார்ட் 2 பணிகள்

விறுவிறுப்பாக நடைபெறும் 3 இடியட்ஸ் படத்தின் பார்ட் 2 பணிகள்

TV9 Tamil 1 month ago
பாலிவுட் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 3 இடியட்ஸ்.
இந்தப் படத்தில் நடிகர் அமீர் கான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஆர்.மாதவன், ஷர்மன் ஜோஷி, போமன் இரானி, கரீனா கபூர், ஓமி வைத்யா, மோனா சிங், அலி ஃபசல், ராகுல் குமார், துஷ்யந்த் வாக், பரீக்ஷித் சாஹ்னி, ஃபரிதா தாடி, அகில் மிஸ்ரா, அமர்தீப் ஜா, முகுந்த் பட், ஒலிவியர் சஞ்சய் லாபொன்ட், ராஜேந்திர பட்வர்தன், ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயந்த் கிருபலானி, சைதாலி போஸ், ஜாவேத் ஜாஃப்ரி, அருண் பாலி, அச்யுத் போட்டார், மாதவ் வசே என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் 3 இடியட்ஸ் படத்தின் பார்ட் 2 பணிகள்:

முதல் பாகமான 3 இடியட்ஸ் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெறுவதகா நடிகர் அமீர் கான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன்படி நடிகர் அமீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது கூறியதாவது, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த, ஒரு வித்தியாசமான கதை. '3 இடியட்ஸ்' படத்தில் நீங்கள் கண்ட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி கதைகள் உள்ளன; ஆனால், இக்கதைகள் 10 ஆண்டுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமைந்தவை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... Dhanush: எனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டீர்கள்.. வெங்கி அட்லூரி பற்றி பேசிய தனுஷ்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil