தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
விசிக - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக கடிதம்
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு வீரபாண்டியன் ஆகியோருக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, காங்கிரஸ் கட்சி வசம் 5 எம்எல்ஏக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வசம் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுகவின் தொடர் வீழ்ச்சி.. 150லிருந்து 47 இடங்களாகச் சரிவு.. இபிஎஸ்-க்கு வலுக்கும் நெருக்கடி!!இடதுசாரிகள் வசமிருக்கும் 11 எம்எல்ஏக்கள்
மொத்தமாக 11 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் என தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் நம்புகின்றன. இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் ஆதரவு கோரி விஜய் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், பாட்டாளி மக்கள் கட்சி வசம் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் மூலம் ஆட்சி அமைத்தல் பெரும்பான்மை கிடைத்து விடும் என எண்ணப்படுகிறது.இடதுசாரி கட்சிகள் நிலைப்பாடு என்ன
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வருகிற மே 9- ஆம் தேதி செயற்குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டு தெரிவிப்பதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதே போலஸ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய்யின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?..
