Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகி வருகின்றது

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகி வருகின்றது

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.
இந்தப் படம் திரையரங்குகளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவணத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் நேற்று படக்குழு படத்தில் இருந்து தி ஒன் ரூல் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிட்டது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகிறது:

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தி ஒன் ரூல் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ... முன்பு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன் - இயக்குநர் ஜூட் ஆண்டனி

விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil