தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சூர்யவின் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உள்ளது அயன். இந்தப் படம் கடந்த 03-ம் தேதி ஏப்ரல் மாதம் 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் கேவி ஆனந்த் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகானக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பிரபு, தமன்னா பாட்டியா, ஆகாஷ்தீப் சைகல், ஜெகன், கருணாஸ், பொன்வண்ணன், ரேணுகா, டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன், சுபலேகா சுதாகர், ஜானகி சபேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எம். சரவணன் மற்றும் எம். எஸ். குகன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
17 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் சூப்பர் ஹிட் அயன் படம்:
இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படம் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாரிஸ் இசையில் சூர்யா மற்றும் தமன்னாவின் ரொமாண்டிக் காட்சிகளை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றனர். ... Ramayana: 'இந்த தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகள் ஆனது' - ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு!
