உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது.
இந்திய பயனர்களிடம் வயது கேட்கும் வாட்ஸ்அப்?
இந்திய பயனர்களிடம் வாட்ஸ்அப் வயது கேட்பதாக கூறப்படுவது அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட் மூலம் தொடங்கியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த ஸ்கிரீன்ஷாட்டில், வாட்ஸ்அப் பயனரை தனது பிறந்த தேதியை இணைக்குமாரு கூறுகிறது. விரைவில் வரவுள்ள இந்திய அரசின் புதிய விதிக்காக வயது கேட்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?வாட்ஸ்அப் பயனர்களின் வயதை கேட்பது ஏன்?
வாட்ஸ்அப்பில் தோன்றுவதை போல மத்திய அரசு எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் வாட்ஸ்அப் ஏன் வயதை கேட்கிறது என உங்களுக்கு சந்தேகம் வரலாம். வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் வயது கேட்பது இது முதல் முறை அல்ல. அந்த நிறுவனம் தொடர்ந்து பயனர்களிடம் வயதை கேட்டு வருகிறது. தான் அறிமுகம் செய்யும் புதிய அம்சங்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வாறு பயனர்களிடம் வயதை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளது. உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! வாட்ஸ்அப் நிறுவனம் சில பயனர்களிடம் வயதை கேட்டாலும், வயது கட்டுப்பாடு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
