Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள்

யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல ஹிட் படங்களில் நடித்து தற்போது படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.
இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த யோகி பாபு பிறகு கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து காமெடி மற்றும் கதையின் நாயகன் என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் கெணத்த காணோம். மிகவும் அழுத்தமான கதையை காமெடியாக மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்தப் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர். படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அர்ஜுனன் பேர் பத்து.

அர்ஜுனன் பேர் பத்து படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள்:

இயக்குநர் ஆர்.ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை அனாமிகா மகி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணிய சிவா, 'மைனா' நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், 'வணக்கம்' கந்தசாமி, எம்.சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படத்தில் இருந்து முதல் சிங்கிளாக தற்போது சாமி தந்த வரமே என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதி உள்ள நிலையில் இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ... Sardar 2: அப்போ தீபாவளிக்கு இல்லையா? கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் எப்போது தெரியுமா?

இசையமைப்பாளர் டி இமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil