இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த ஆக்ஷன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக படம் தணிக்கை குழுவிற்கு சென்றபோது அங்கு படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுட்தனர். இதனால் இந்த கூலி படத்தை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் திரையரங்குகளில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு 18 வயதிற்கு அதிகமானோர் மட்டுமே திரையரங்குகளில் கூலி படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு படத்தில் எந்தவித வன்முறை காட்சிகளும் இல்லை. அதனால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருந்தால் குடும்பத்தினருடன் வந்து படத்தை பார்த்து இருப்போம் என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கூலி படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் யு/ஏ சான்றிதல் கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வழக்கின் முதல் விசாரனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு வந்தது. இரு தரப்பின் விசாரணையை கேட்ட நீதிபதிகள் வழக்கை 25-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டிற்கு ஒத்திவைத்தனர். அன்று வழக்கு விசாரணை நடைப்பெற்ற பிறகு வழக்கின் விசாரனையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். கூலி படக்குழு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய காரணம் என்ன?
இந்த நிலையி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் கூலி படத்தில் அதிப்படியான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசுவது என அதிமாக இருப்பதால் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: